என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்தவர் சிக்கினார்
- மாதாந்திர சீட்டுத்தொகையாக பெற்று சீட்டு முதிர்வுக்கு பின்னும் தான் உறுதி அளித்தது போல் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
- வலசையூரில் பதுங்கி இருந்த கோபாலை கைது செய்தனர். கைதான அவரை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பப்பிரெட்டியூர் அருகே காட்டுவளவு கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவர் கடந்த 2000-ம் ஆண்டு வருடம் முதல் 2014 முடிய 4 வருடம் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.
அதில் நல்லம்பள்ளி அருகே உள்ள லளிகம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரும் கோபால் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி ரூபாய் 5 லட்சம் 3 லட்சம் மற்றும் ரூ.1 லட்சத்திற்க்கான ஏலச்சீட்டு ஆகியவற்றில் சேர்ந்து மாதம் மாதம் சீட்டு பணம் கட்டி வந்தனர். மொத்தம் 2 பேரும் சேர்ந்து ரூ.9,45,000-கட்டியுள்ளனர்.
இதற்காக, ரசீதை கோபால் கையெழுத்து போட்டு எழுதி கொடுத்துள்ளதாகவும், ஏல சீட்டு முதிர்வுக்கு பின்னர் பணம் தருவதாக உறுதி அளித்தார். ஆனால் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். பின்னர் திடீரென்று கோபால் வீட்டை காலி செய்து தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து அவர்கள் இருவரும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
விசாரணைக்காக இந்த வழக்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவிலிருந்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் எதிரி கோபால் இதுவரை 13 நபர்களிடமிருந்து ரூ.66,65,000- பணத்தை மாதாந்திர சீட்டுத்தொகையாக பெற்று சீட்டு முதிர்வுக்கு பின்னும் தான் உறுதி அளித்தது போல் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையிலான குழுவினர் நேற்று சேலம் மாவட்டம், வீராணம் அடுத்த வலசையூரில் பதுங்கி இருந்த கோபாலை கைது செய்தனர். கைதான அவரை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.






