என் மலர்
உள்ளூர் செய்திகள்

அக்னி பாத் திட்டத்தை கண்டித்து ஓசூரில் சி.பி.எம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- அக்னி பாத் திட்டத்தை கண்டித்தும் அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும், ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு, மாநகர செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
ஓசூர்,
சி.பி.எம்.கட்சியின், கிருஷ்ணகிரி மாவட்ட குழு சார்பில் மத்திய அரசின், அக்னி பாத் திட்டத்தை கண்டித்தும் அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும், ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாநகர செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி முன்னிலை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் டில்லிபாபு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மேலும் இதில், சேகர், இருதயராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக்கால குழு செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






