என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் கொடுமைபடுத்துவதாக புகார்
- எங்கள் உறவினர் அனைவரையும் நெய்க்காரப்பட்டி போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கொடுமைபடுத்துகின்றனர். பெண்கள் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் பேசியும், மிரட்டிம் வருகின்றனர்.
- இதனால் அக்கம் பக்கம் உள்ள அனைவரும் எங்களை அலட்சியமாக பார்த்து குடியிருக்க வீடு தர மறுக்கின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரபட்டியைச் சேர்ந்த வனவேங்கைகள் கட்சி உறுப்பினர் சுமதி தலைமையில் கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் உறவினர் அனைவரையும் நெய்க்காரப்பட்டி போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கொடுமைபடுத்துகின்றனர். பெண்கள் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் பேசியும், மிரட்டிம் வருகின்றனர். போலீசார் எங்கள் குறவர் இனத்துக்கு எதிராக நடந்து கொள்கின்றனர்.
வீட்டுக்கு வரும் உறவினர்களையும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். இதனால் அக்கம் பக்கம் உள்ள அனைவரும் எங்களை அலட்சியமாக பார்த்து குடியிருக்க வீடு தர மறுக்கின்றனர். எனவே எங்கள் வாழ்வாதாரம் இழந்து துன்பப்படுகிறோம். நெய்க்காரபட்டி போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.






