என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் பொது மக்கள் தேவையற்ற பொருட்களை  கொண்டு வந்து கொடுக்கலாம்- மாநகராட்சி ஆணையாளர் தகவல்
    X

    ஓசூரில் பொது மக்கள் தேவையற்ற பொருட்களை கொண்டு வந்து கொடுக்கலாம்- மாநகராட்சி ஆணையாளர் தகவல்

    • குப்பையினை, மக்கும் குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையினை, நுண்ணுர மையங்களில் செயலாக்கம் செய்து உரம் தயாரிக்கப்படுகிறது.
    • இந்த சிறப்பு ஆர்.ஆர்ஆர் மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    "ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பையினை, மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையினை, நுண்ணுர மையங்களில் செயலாக்கம் செய்து உரம் தயாரிக்கப்படுகிறது. மக்கா குப்பையினை மேலும் தரம் பிரித்து ரெடியுஸ், ரீசைகிள், ரீயூஸ் (ஆர்.ஆர்.ஆர்) என மறுசுழற்சிக்குட்படுத்த வளமீட்பு மையங்களில் சேமிக்கப்படுகிறது.

    அவ்வாறான வள மையம், ஓசூரில் மூக்கண்ட பள்ளி எம்.எம்.நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. வீடு வீடாக பெறப்படும் மறுசுழற்சிக்கான பொருட்கள் இங்கே சேகரிக்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையற்ற துணிகள், காலணிகள், பொம்மைகள், புத்தகங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகிய பொருட்களை இந்த சிறப்பு ஆர்.ஆர்ஆர் மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாங்களே கொண்டு வந்து கொடுத்து, பதிவு புத்தகத்தில் பதிவு செய்யலாம் . இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×