search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி அருகே பள்ளி சுவர்களை அலங்கரித்த வண்ண ஓவியங்கள்
    X

    பள்ளி சுவர்களில் பலவித வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

    செம்பட்டி அருகே பள்ளி சுவர்களை அலங்கரித்த வண்ண ஓவியங்கள்

    • செம்பட்டி அருகே பாளையங்கோட்டை பள்ளி சுவர்களில் தமிழக முதல்வ ரின் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு ள்ளது. இதனை பொது மக்கள் பாராட்டினர்.
    • ரூ.50 ஆயிரம் செல வில் பள்ளி சுவர்களுக்கு வண்ணம் தீட்டி அழகிய யானை, சிங்கம், மான் போன்ற மிருகங்கள், மயில் போன்ற பறவைகள் படங்களை வரைந்தனர்

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே பாளையங்கோட்டை பள்ளி சுவர்களில் தமிழக முதல்வ ரின் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு ள்ளது. இதனை பொது மக்கள் பாராட்டினர்.

    பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி யில் 150 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக செல்வேந்திரன் உள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். பள்ளியின் சுவர்கள் மங்கிய நிலையில் இருந்தது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணும், எழுத்தும் திட்ட த்தின் கீழ், தலைமையாசிரியர் செல்வேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு முயற்சி யால், ரூ.50 ஆயிரம் செல வில் பள்ளி சுவர்களுக்கு வண்ணம் தீட்டி அழகிய யானை, சிங்கம், மான் போன்ற மிருகங்கள், மயில் போன்ற பறவைகள் படங்களை வரைந்தனர்.

    படங்களை பார்த்து பள்ளி மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊர் பொதுமக்கள், தலைமை ஆசிரியர் செல்வேந்திரன் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர்.

    Next Story
    ×