search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தை -  கல்லூரி மாணவர்கள் முற்றுகை
    X

    கலெக்டர் அலுவலகத்தை - கல்லூரி மாணவர்கள் முற்றுகை

    • வாய்க்காலில் குளிக்க சென்றதில் தண்ணீரில் அடித்து செல்லப் பட்டார்.
    • சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போரா ட்டம் நடத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூரை சேர்ந்த சங்கீதா என்பவரது மகன் சஞ்சய்(வயது20). சிக்கண்ணா அரசு கல்லூரி 3-ம் ஆண்டு மாணவர். இவர் கடந்த 19-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) தனது நண்பர்களுடன் தாராபுரம் ரோடு ஆண்டிப்பாளையம் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றதில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினரும், தீயணைப்பு படையினரும் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் உள்ள கால்வாயிலும் தேடினர். ஆனால் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடுதல் பணியை தீவிரப்படுத்தக்கோரி அவரது உறவினர்கள் ஆண்டிப்பாளையம் பகுதியில் சாலை மறி–யல் போரட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் மாணவரின் தாயார் சங்கீதா தனது உறவினர்களுடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் , பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. எனவே வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி எனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்தநிலையில் சஞ்சய்யை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி அரசு சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

    Next Story
    ×