என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வடமதுரை அருகே கல்லூரி மாணவி மாயம்
- திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வடமதுரை அருகே கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
- இந்த நிலையில் தேர்வு எழுதிச் சென்ற மாணவி திடீரென மாயமானார்.
வடமதுரை:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் மணிசேகரன் மகள் சுருதி (வயது19). இவர் அய்யலூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். கல்லூரியில் தேர்வு எழுதி விட்டு சொந்து ஊருக்கு செல்வதாக கூறி சென்றார்.
ஆனால் மாணவி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தஅவரது பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி தலைமை யிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருதியை தேடி வருகின்றனர்.
Next Story






