என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளின் தரவுகளை பதிவேற்றம் செய்யும் பணி குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    மயிலாடுதுறை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விவசாயிகளின் தரவுகளை பதிவேற்றம் செய்யும் பணி குறித்து கலெக்டர் ஆய்வு

    • தமிழகம் முழுவதும் விவசாயிகளின் பற்றிய விபரம் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • இதில் மயிலாடுதுறை மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்த அதிரடியாக உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் விவசாயிகளின் பற்றிய விபரம் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளின் பள்ளி விபரம் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    வேளாண் அடுக்கம் என்று சொல்லக்கூடிய என்ற செயலி மூலம் விவசாயிகளின் ஆதார் எண், வங்கி கணக்கு விபரம், நில உடமை விபரம் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அவ்வாறு பதிவேற்றம் செய்வதால் ஒன்றிய அரசு, தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் தொடர்பான குறிப்பாக, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, உணவு பொருள் வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சி த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை வணிகவரித்துறை, விதை சான்றளிப்புத்துறை, போன்ற 13 த்துறைகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்துத் திட்டப்பலன்களும் கிடைக்கச் செய்யும் வகையில் விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 68382 விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்வதில் மாநிலத்தில் முதலிடத்தில் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×