search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் நிறுவனங்களில் கலெக்டர் ஆய்வு
    X

    தொழில் நிறுவனங்களில் கலெக்டர் ஆய்வு

    • மானிய உதவியுடன் தொழில் நிறுவனங்களை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • பெண் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டுள்ள விசைத்தறிக் கூடத்தையும் பாா்வையிட்டாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பி.எம்.இ.ஜி.பி.) கீழ் 107 பேருக்கு ரூ.4.08 கோடி மானிய உதவியுடன் சுமாா் ரூ.12.30 கோடி முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்கவும், புதிய தொழில் முனைவோா் தொழில் நிறுவன வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 31 பேருக்கு ரூ.10.53 கோடி மானிய உதவியுடன் ரூ.52.65 கோடி முதலீட்டில் தொழில் நிறுவனங்களை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் திருப்பூா் மாநகராட்சி மற்றும் பல்லடம் வட்டாரப் பகுதிகளில் ரூ.88.13 லட்சம் மானிய உதவியுடன் ரூ.4.57 கோடி திட்ட மதிப்பீட்டில் பி.எம்.இ.ஜி.பி., நீட்ஸ் திட்டங்களில் வங்கிக் கடன் பெறப்பட்டு தொடங்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா்.

    இதில், பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் ரூ.6.25 லட்சம் மானிய நிதியுதவியுடன் ரூ.25 லட்சம் முதலீட்டில் வித்யாலயம் பகுதியில் தனிநபா் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தையும், நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.44.10 லட்சம் மானியத்துடன், ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் பல்லடம் வட்டத்தில் தனிநபா் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள பின்னலாடை நிறுவனத்தையும் மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தாா். அதேபோல, தெற்குபாளையம் பிரிவில் நீட்ஸ் திட்டத்தின்கீழ் ரூ.37.78 லட்சம் மானியத்தில் ரூ.2.33 கோடி மதிப்பீட்டில் பெண் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டுள்ள விசைத்தறிக் கூடத்தையும் பாா்வையிட்டாா்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் (தொழில்நுட்பம்) கிரீசன், உதவிப் பொறியாளா் தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    Next Story
    ×