என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய மின்னணு வேளாண் சந்தை மையத்தில் கலெக்டர் ஆய்வு
- விவசாயிகளிடம் பருத்தி விலை பணம் பட்டுவாடா குறித்து கேட்டறிந்தார்
- கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பள்ளியாக உள்ளது.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூரில் இயங்கி வரும் தேசிய மின்னணு வேளாண் சந்தை மூலமாக நடைபெறும் பருத்தி மறைமுக ஏலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பிறகு விவசாயிகளிடம் பருத்தி விலை பணம் பட்டுவாடா குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஏலத்தில் அதிகப்படியான வெளி மாநில மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் பருத்தி விலை பணம் பட்டுவாடா குறித்து கேட்டறிந்தார்ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் இயங்கி வரும் முதன்மை பதப்படுத்தபடும் நிலையத்தை ஆய்வு செய்த பிறகு முழு பயன்பாட்டிற்கு கொண்டு உத்தரவு பிறப்பித்தார்.
ஆய்வின்போது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் விஜயா வேளாண் உதவி இயக்குனர் சரோஜா, வட்டாட்சியர் பெருமாள், தேசிய மின்னணு வேளாண் சந்தை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், தமிழரசு இளநிலை உதவியாளர் மோகன்குமார், தேசிய மின்னணு வேளாண் சந்தை பணியாளர்கள் சதீஷ், பாண்டியன், ஏழுமலை, மகிழ்வாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதேபோல அரூர் வட்டம், கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு பொது தேர்வில் ஆண்டுதோறும் 100 சதவீத தேர்ச்சிப் பெறும் பள்ளியாகும். அரூர் வட்டாரப் பகுதியில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பள்ளியாக உள்ளது.
கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அனைத்து தகுதிகள் இருந்தும், ரூ. 2 லட்சம் நிதியுதவி இல்லாததால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இப் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவிகள் பலர், மேல்நிலைப் பள்ளியில் சேராமல் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதால் பழங்குடியின சிறுமிகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்யும் நிலை இருப்பதாகவும், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பள்ளி நிர்வாகம் சார்பில் எவ்வித முயற்சியும் செய்யாமல் காலம்தாழ்த்தி வருவதாக கலெக்டர் சாந்தியிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் கல்வித் தரம், ஆசிரியர்களின் வருகை, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம், பள்ளிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான பணிகள், பழங்குடியின மாணவியரின் இடைநிற்றல் குறித்த விவரங்களையும் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான துரித நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் ஆய்வின்போது கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.