search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல்  வைக்க வேண்டும் கலெக்டர் சாந்தி தகவல்
    X

    அனைத்து மதுக்கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் கலெக்டர் சாந்தி தகவல்

    • மதுபான கடைகள் அரசு அனுமதிக்கப்பட்ட நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூட வேண்டும்.
    • அதிக விலைக்கு செய்த 13 கடை ஊழியர்களுக்கு ரூ.1.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், சட்ட விரோத மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக வாராந்திர கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

    கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக வாரந்தோறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அனைத்து மதுக்கடைகளிலும் கண்டிப்பாக விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு நன்கு தெரியும்படி வைக்க வேண்டும்.

    மேலும் அரசு நிர்ணயித்துள்ள அதிக பட்ச சில்லரை விற்பனை விலையை விட அதிக விலையில் விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

    கடந்த வாரத்தில் மதுபானங்களை அதிக விலைக்கு செய்த 13 கடை ஊழியர்களுக்கு ரூ.1.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் மதுக்கடையில் வெளி நபர்களை வைத்து மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த விற்பனையாளர் ஒருவர் தற்காலிக பணிவிலக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போன்று நிகழ்வுகளில் ஈடுபடும் மதுபான கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுபான கடைகள் அரசு அனுமதிக்கப்பட்ட நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூட வேண்டும்.

    மதுக்கடைகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடைகளில் தண்ணீர் பாட்டில், டம்ளர் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்து மது அருந்த அனுமதித்த 13 நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

    மேலும் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் தாபாக்கள், சந்துகடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றை கண்டறிவதற்காக மாவட்ட மேலாளர், காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கூட்டு தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இனி வரும் காலங்களில் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படும்.

    மேலும் பொது மக்கள் மதுபானம் குறித்த புகார்களை 63690 28922 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×