search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைக்காலங்களில் பள்ளி குழந்தைகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் கலெக்டர் முரளிதரன் உத்தரவு
    X

    போடி அருேக அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கலெக்டர் முரளிதரன் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    மழைக்காலங்களில் பள்ளி குழந்தைகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் கலெக்டர் முரளிதரன் உத்தரவு

    • அணைக்கரைப்பட்டி ஊராட்சிப்பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • சோலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியின் செயல்பாடுகள் குறித்தும், ஆசிரிய ர்களின் எண்ணிக்கை, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்ப ட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி சோலையூர் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.3. லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளையும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியினையும் பார்வை யிட்டார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டி ஓடையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தடுப்பணையினையும், ஆதிதிராவிடா; நலத்துறையின் சார்பில் ரூ.4.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் பணியினையும், நபார்டு திட்டத்தின் கீழ் அத்தியயூத்து பகுதியில் வலசைத்துறை சாலை முதல் அத்தியூத்து சாலை ஓடையில் ரூ.272.20லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ராஜவாய்கால் கால்வாயில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தடுப்பணையினையும் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பய ன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அதனைத்தொடார்ந்து, சோலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று பார்வை யிட்டு ஆசிரிய ர்களின் எண்ணிக்கை, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களின் எண்ணிக்கை, வருகைப்பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மழைகாலமாக உள்ளதால் பள்ளி வகுப்பறை, மாணவ மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் ஆசிரியரை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது போடிநாயக்கனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலெட்சுமி, ஞானதிருப்பதி உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×