search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் முதியோர் இல்ல செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X
    முதியோர் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.

    தேனி மாவட்டத்தில் முதியோர் இல்ல செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட தருமத்துப்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்க கூடிய குழந்தைகள் மற்றும் முதியோர்களின் எண்ணிக்கை, பணியாற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை, தங்கும் அறை, சமையலறை, வழங்கப்படும் உணவின் தரம், மருத்துவ வசதிகள், பொழுது போக்கு அம்சங்கள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் கலந்துரையாடி, இல்லத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா தேவி, ஏ.எச்.எம் டிரஸ்ட் இயக்குநர் முகம்மது ஷேக் இப்ராஹீம் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    முன்னதாக பூதிப்புரம், வீரபாண்டி, கோடாங்கிபட்டி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் போ.மீனாட்சிபுரத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த மாதம் ரேசன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ள நிலையில் கடைகளில் பொருட்களின் இருப்பு, தராசுகளின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்து பொதுமக்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தார்.

    Next Story
    ×