search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.59 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
    X

    வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.59 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு

    • வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.59 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • பள்ளிகளில் ஆய்வு செய்த கலெக்டர் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் திறனை மேம்டுபடுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, பில்லனகுப்பம், கோடிப்பள்ளி, ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்ட பணிகளை கலெக்டர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குந்தாரப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி 2023-2024 நிதியாண்டின் கீழ் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் குந்தாரப்பள்ளி தெற்கு தெரு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பேவர்பிளாக் கற்கள் அமைக்கும் பணிகளையும், ஜெட்ஏரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏரி தூர் வாரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து குந்தாரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை பார்வையிட்டு ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாட திட்டங்கள் மாண வர்களுக்கு எளிதில் புரியும்படி கற்பித்தல் வேண்டும். மேலும் மாணவ மாணவியர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என ஆசிரி யர்களுக்கு அறிவு றுத்தினார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும், குழந்தை களின் எடை, உயரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து சாமந்தமலை ஊராட்சி, குட்டுர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமையலறை கட்டிடம் கட்டுமான பணிகளையும்,

    பில்லனகுப்பம் ஊராட்சி பண்டப்பள்ளி கிராமத்தில், 15 வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் புதியதாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ், ரூ. 5 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் பண்டப்பள்ளி ஏரி தூர் வாரும் பணிகளையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் விவசாயி கிருஷ்ணப்பா நிலத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பட்டு கூடு உற்பத்தி கொட்டகை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முடிவில் குந்தாரப்பள்ளி ஊராட்சியில் குந்தாரப்பள்ளி முதல் வேப்பனப்பள்ளி செல்லும் சாலை, நடுப்பட்டி கிராமத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகள் என மொத்தம் ரூ.59 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், உதவி பொறியாளர்கள் தீபமணி, மணிவண்ணன், பணி மேற்பார்வையாளர்கள் மூர்த்தி, தேன்மொழி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×