search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு
    X

    கொரோனோ தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் முரளிதரன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் கலெக்டர் ஆய்வு

    • தேனி மாவட்டம் முழுவதும் 31-வது கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.
    • கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்து முககவசம் அணியவும் வலியுறுத்தினார்.

    தேனி:

    கொரோனா நோய்த் தொற்று பரவுதலை தடுத்திடும் பொருட்டு, தமிழக அரசின் வழிக்காட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    பொது மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாமல் உள்ளதால் தற்போது கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த் தொற்றின் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கொரோனா தொற்றினை கட்டுப்படுத்திட தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத, விடுபட்ட நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் இன்று மாவட்டம் முழுவதும் 31-வது கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

    தேனி நாடார் சரஸ்வதி பாலார் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்பத்டுதினார். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×