search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய நடவடிக்கை-அலுவலர்களுக்கு கலெக்டர் அம்ரித் உத்தரவு
    X

    அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய நடவடிக்கை-அலுவலர்களுக்கு கலெக்டர் அம்ரித் உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல் போன்ற கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
    • அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு, முட்டை போன்ற சத்தான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியம், இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட கல்லக்கொரை கிராமத்தில், குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டார்.கூட்டத்தில் அடிப்படை தேவைகள் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல் போன்ற கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    இத்தலார் ஊராட்சியில் அனைத்து அரசின் திட்டங்களும் சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு சென்றடைய துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    6 வயது உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு, முட்டை போன்ற சத்தான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பணிகள் எடுக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் மற்றும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து, கிராமங்களை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, கலெக்டர் அம்ரித் கல்லக்கொரை அரசு உயர்நிலைப்பள்ளியில், சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் என்ற தலைப்பில் உறுதிமொழியினை அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் மகளிர் திட்டம் சார்பில் 3 உதவிக்குழுக்களுக்கு ரூ.36 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலகணேஷ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலாமேரி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீணாதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், இத்தலார் ஊராட்சி தலைவர் பந்தையன், குந்தா வட்டாட்சியர் இந்திரா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், விஜயா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×