என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே நிலத்தில் குடியிருப்புகள் அகற்றப்பட்ட காட்சி.
டேனிஷ்பேட்டை அருகே ரெயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி செல்லும் சாலையில் டேனிஷ் பேட்டை ரெயில் நிலையம் அமைந்துள்ளது.
- ரெயில்வே துறையினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய இரண்டு கட்டமாக அப்பகுதி மக்களுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி செல்லும் சாலையில் டேனிஷ் பேட்டை ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான சுமார் 50 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் பல ஆண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர் .
ரெயில்வே துறையினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய இரண்டு கட்டமாக அப்பகுதி மக்களுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்கு முன் வராத நிலையில் மக்கள் அப்பகுதியில் இருந்து வந்தனர். இன்று தேதி குறிப்பிட்ட நிலையில் முன்னதாகவே அவரவர் தேவையான பொருட்களை எடுத்துகொள்ளலாம் என்ற நிலையில் கடந்த 2 நாட்களாக மக்கள் வீடுகளில் தேவையான பொருட்களை எடுத்துச் சென்றனர்.
மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி மேட்டூர் சப்கலெக்டர் பிரதாப் சிங் மற்றும் தாசில்தார் அருள் பிரகாஷ் மற்றும் வருவாய் துறையினர், ரெயில்வே துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நிலத்தை சமன் செய்ய ரெயில்வே துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சம்பவத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா , தீவட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ரெயில்வே போலீஸ் அதிரடிப்படை, தீயணைப்புத் துறையினர், மருத்துவத் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






