என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் தூய்மை பணி
    X

    கிருஷ்ணகிரியில் தூய்மை பணி

    • கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் இருந்தது.
    • சிறப்பு தூய்மைப் பணிமேற்கொள்ளப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எல்.ஐ.சி. காலனி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் அப்பகுதிக்கு துப்புரவு பணியாளர்களுடன் சென்று, கழிவுநீர் கால்வாய் அடைப்பினை, நீண்ட நாட்கள் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றுதல், முட்புதர்களை அகற்றுதல் போன்ற சிறப்பு தூய்மைப் பணியினை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் தேவேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆயிஷா முகமதுஜான், தேன்மொழி மாதேஷ் மற்றும் வட்ட பிரதிதிநி ஜெயசிம்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×