என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் கிளாசிக் அரிமா ஆளுநர் வருகை தின விழா
    X

    சங்கரன்கோவிலில் கிளாசிக் அரிமா ஆளுநர் வருகை தின விழா

    • 30 பெண்களுக்கு சேலை, 10 நபர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் கிளாசிக் அரிமா சங்கத்தின் ஆளுநர் வருகை தின நிகழ்ச்சி தெற்கு ரதி வீதியில் உள்ள ஏ.ஆர்.திவ்யா பேக்டரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கிளாசிக் அரிமா சங்க தலைவர் தொழிலதிபர் திவ்யா ரெங்கன் தலைமை தாங்கினார். ரமேஷ் பாபு தொகுத்து வழங்கினார். செயலாளர் செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

    இதில் மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன் மற்றும் மாவட்ட முதல் பெண் உறுப்பினர் கலையரசி ஆகியோர் கலந்துகொண்டு சங்கரன்கோவில் கிளாசிக் அரிமா சங்கத்தின் சிறப்புகளையும், 234 நாட்கள் தொடர்ந்து பசிக்கு உணவு திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் திட்டத்தையும் பாராட்டி பேசினர். இதில் 30 பெண்களுக்கு சேலை, 10 நபர்களுக்கு அரிசி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அமைச்சரவை செயலாளர், பொருளாளர், மண்டல தலைவர் அன்பின் கிறிஸ்டோபர் மற்றும் பல சங்கங்களில் இருந்து திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் கதிர்வேல் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    Next Story
    ×