என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெண்களிடம் சில்மிஷம்-புதுமாப்பிள்ளையை மடக்கி பிடித்த பொதுமக்கள்
  X

  பெண்களிடம் சில்மிஷம்-புதுமாப்பிள்ளையை மடக்கி பிடித்த பொதுமக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாலிபர் வரும் சி.சி.டி.வி காட்சிகளை அப்பகுதி மக்கள் ஆய்வு செய்தனர்.
  • வாலிபரை பொதுமக்கள் பிடித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  சூலூர்:

  கோவை சூலூர் காடம்பாடி அருகே நேருநகர் பகுதியில் வாலிபர் ஒருவர் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வாகனத்தில் வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

  இதுகுறித்து விசாரிக்க அப்பகுதி இளைஞர்களுடன் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த வாலிபர் வரும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க பொது மக்கள் முயற்சி செய்து வந்தனர்.

  இந்நிலையில் நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது மொபட்டில் அந்த வழியாக சென்றார். அப்போது அங்கிருந்த அந்த வாலிபர் அந்த இளம்பெண்ணை வழிமறித்தார்.

  பின்னர் திடீரென அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயற்சி செய்ததார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம்போட்டார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அந்த இளம்பெண் பொதுமக்களிடம் கூறினார்.

  மக்கள் அந்த வாலிபரை பிடிக்க விரைந்தனர். அப்போது சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக ெமாபட்டில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்தான் தனியே வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

  இதையடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்த சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் சோமனூரைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகி இருந்ததும் தெரியவந்தது.

  புதுமாப்பிள்ளை குடிபோதையில் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×