search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள் அகற்றாததால் தேங்கிய குப்பை கழிவுகளை அகற்றிய பொதுமக்கள்
    X

    குப்பை கழிவுகளை அகற்றிய பொதுமக்களை படத்தில் காணலாம்.

    தூய்மை பணியாளர்கள் அகற்றாததால் தேங்கிய குப்பை கழிவுகளை அகற்றிய பொதுமக்கள்

    • குப்பைகளை தெருக்களிலேயே அப்படியே விட்டு விட்டு செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
    • அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மிகப்பெரிய இரண்டாவது ஊராட்சியாக இலக்கியம்பட்டி திகழ்ந்து வருகிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ஊராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்கு கொண்டுவரப்பட்டு மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு விவசாயிகளுக்காக உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

    அவ்வாறு ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வரும் பொழுது கிடங்கிற்கு உள்ளே பிரிக்காமல் வெளியில் உள்ள தெருக்களில் கொட்டி தேவையான அளவுக்கு மட்டும் பிரித்து எடுத்துவிட்டு மற்ற குப்பைகளை தெருக்களிலேயே அப்படியே விட்டு விட்டு செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் வேறு வழி இன்றி தங்கள் பகுதியில் தூய்மை மற்றும் சுகாதாரம் காக்க வேண்டி அப்பகுதியில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து தூய்மை செய்யும் துப்புரவு பணியினை மேற்கொண்டணர். மேலும் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தையும் அங்கு செயல்படும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்க்கு அப்பகுதி மக்கள் வழங்கியுள்ளனர்.

    ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இப்பகுதியில் தூய்மை பணியை செய்ய யாரும் முன் வராத நிலையில் எங்கள் பகுதியை பாதுகாக்க நாங்களே முன்னெடுப்பு பணிகளையும் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை செய்து வருகின்றோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×