search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் புகாருக்கு முறையான பதில் அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு  மேயர் உத்தரவு
    X

    பொதுமக்கள் புகாருக்கு முறையான பதில் அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

    • பொதுமக்கள் அடிப்படை வசதிகள் குறித்து தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் ஒருகுரல் புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • விவரம் கேட்டு அதை தினமும் அறிக்கையாக தனக்கு அனுப்பி வைக்குமாறு மேயர் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் குறித்து தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் ஒருகுரல் புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுவரை தெரிவித்த புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள புகார்கள் உள்ளிட்ட விவரங்களை மேயர் தினேஷ்குமார் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்துக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மையத்–துக்கு வந்த பொதுமக்கள் அழைப்பை மேயர், தொடர்பு கொண்டு பேசி குறைகளை கேட்டார்.

    2 ஆயிரத்து 90 புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முழு விவரங்களையும் தெரிவிக்குமாறு கூறினார். அதுபோல் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும், சரி செய்யப்படும்' என்று மழுப்பலாக பதில் தெரிவித்து அந்த புகார்களை முடித்து வைப்பதாக தகவல் வந்துள்ளது. அது–போன்று பதில் அளிக்கக்கூடாது. அதுபோன்ற புகார்களை மீண்டும் எடுத்து விசாரிக்க வேண்டும். பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டது என்பதற்கான புகைப்படத்தையும் இணைத்த பிறகே அந்த புகாரை முடித்து வைக்க வேண்டும். இதை கட்டளை மையத்தில் உள்ள அதிகாரிகள் கண்காணிப்பது அவசியம்.

    புகார் அளித்தவர்களை போனில் தொடர்பு கொண்டு, புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதா? நடவடிக்கையில் திருப்தி உள்ளதா? என்று விவரம் கேட்டு அதை தினமும் அறிக்கையாக தனக்கு அனுப்பி வைக்குமாறு மேயர் உத்தரவிட்டார். ஒருகுரல் புரட்சி திட்டம் மீது மக்களின் நம்பிக்கை கெடாத வகையில் செயல்பாடு இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×