search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாகுபுரம்  கமலாவதி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
    X

    விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.

    சாகுபுரம் கமலாவதி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

    • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார்.
    • விழாவை முன்னிட்டு ஸ்டார் தோரணங்களால் பள்ளி வளாகம் அலங்கரிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார். மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர் வரவேற்று பேசினார். விழாவை முன்னிட்டு ஸ்டார் தோரணங்களால் பள்ளி வளாகம் அலங்கரிக்கப்பட்டது. பெத்லகேமில் மாட்டு தொழுவத்தில் இயேசுபிரான் பிறந்ததை விளக்கும் வகையிலான நிலைக்காட்சியை மாணவ மாணவிகள் தத்ரூபமாக நடித்துக் காட்டினார். ஆசிரியர் ஜான் சாமுவேல், எபநேசர், ஆறுமுகசாமி மற்றும் ஆசிரியைகள் சிறப்பு பாடல்கள் பாடினார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாணவ மாணவிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முடிவில் ஆசிரியர் ஜேம்ஸ் இக்னேஷியஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×