என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
- இளைஞர் நல குழு பிரதிநிதி கோபிநாத் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தைகளை போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறையினை ஒழித்தல் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
இதில் குழு செயலர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தனபால், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜெயசீலன், அரூர் வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர் மணியம்மாள், குழு உறுப்பி னர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜெய லட்சுமி, உமாராணி, குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்களான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை, குழந்தை பிரதிநிதிகளான தீபன், ஜெயசீலா, சுகாதார ஆய்வாளர் சாதிக்பாஷா, கிராமசுகாதார செவிலியர் நித்யா, போதிமரம் அறக்கட்டளை ராஜேஸ்வரி, சினேகம் தொண்டு நிறுவனத்தின் கமலாமூர்த்தி, காவல் நிலைய குழந்தை நல காவலர் கவிதா, இளைஞர் நல குழு பிரதிநிதி கோபிநாத் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






