search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு
    X

    சாலையின் தரத்தினை தலைமை பொறியாளர் ஆய்வு செய்த காட்சி.

    நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு

    • நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
    • அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    சங்ககிரி:

    ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன், சென்னை கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத் துறை மூலம் சேலம் மாவட்டத்தில் ஓமலூர் முதல் சங்ககிரி வரையிலான சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது.

    இச்சாலைப் பணியின் தரத்தினை சென்னை தலைமைப் பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒப்பந்தாரர்களிடம் சாலைப் பணிகளை விரைவாகவும், தர மாகவும் முடிக்க அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது, கோட்டப் பொறியாளர் சசிகுமார், உதவிக் கோட்டப் பொறியாளர் பொறியாளர் தாரகேஸ்வரன் மற்றும் சாலைப் பணியின் ஒப்பந்ததாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்க ளும் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து தலைமை பொறியாளர் செல்வன் பல்வேறு பகுதிகளில் நடை பெறும் சாலைப்பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அவர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×