search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவல்துறை சார்பில் செஸ், ஓவிய போட்டி
    X

    காவல்துறை சார்பில் செஸ், ஓவிய போட்டி

    • காவல்துறை சார்பில் சிறார்மன்றங்கள் பத்து இடத்தில் இயங்கி வருகின்றன.
    • சிறுவர் சிறுமியர்களுக்கு 10 இடங்களில் ஓவியப்போட்டி, சதுரங்க போட்டி நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சிறார்மன்றங்கள் பத்து இடத்தில் இயங்கி வருகின்றன. தருமபுரி ஆயுதப்படை வாழாகத்தில் 2, மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், மொரப்பூர், பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல், ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுவர் சிறுமியர் மன்றங்கள் இயங்கி வருகின்றன.

    இந்த மன்றங்கள் மூலம் அப்பகுதி சிறார்களுக்கு புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த நூலகத்திற்கு செல்ல வழிகாட்டுதல், விளையாட விளையாட்டு பொருட்கள் வாங்கி கொடுத்தல், மற்றும் சாலையில் செல்லும்போது சாலை விதிகளை கடைபிடித்தால், டூவீலரில் செல்லும்போது தலைக்கவசம் அணிதல், போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக சிறுவர் மன்றங்கள் சார்பில் இலவச மருத்துவ முகாம், கடந்த வாரம் தருமபுரி மாவட்டத்தில் நடந்தது.

    இதனை தொடர்ந்து நேற்றும் நேற்று முன்தினமும் காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர்களுக்கு 10 இடங்களில் ஓவியப்போட்டி, சதுரங்கம் (செஸ்) போட்டி நடந்தது.

    இந்த ஓவியப் போட்டியில் 2000 சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற சிறுமியர்களுக்கு எஸ்.பி. ஸ்டீபன் ஜேசு பாதம் மேற்பார்வையில் அந்தந்த பகுதி டி.எஸ்.பி,க்கள் பரிசு வழங்கினர்.

    Next Story
    ×