என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் உமாராணி ஆகியோர் பார்வையிட்ட காட்சி.
மாணவ, மாணவிகளுக்கு செஸ் விழிப்புணர்வு போட்டி
- செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மேயர் ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கினார்.
- இளைஞர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
சேலம்:
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்க்கு உட்பட்ட காந்திரோடு பகுதியில் 44 -வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் -2022 விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி நடந்தது.
அஸ்தம்பட்டி மண்டல தலைவர் உமாராணி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாநகர நல அலுவலர் டாக்டர் யோகானந்த் ஆகியோர் செஸ் போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.மேலும் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மேயர் ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கினார். இதனையடுத்து தமிழக அரசின் 'எனது குப்பை' எனது பொறுப்பு என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கபட்டது.
இதனையடுத்து இளைஞர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ராஜ்குமார், சங்கீதா நீதி வர்மன், சையத் மூசா, கிரிஜாகுமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.