என் மலர்
உள்ளூர் செய்திகள்

தலைப்பொங்கலை கொண்டாட சென்ற சென்னை என்ஜினீயர் குளத்தில் மூழ்கி பலி
- தலைப்பொங்கலை கொண்டாடுவதற்காக மகாராஜன் தனது மனைவியுடன் மாமனாரின் ஊரான நொச்சிகுளத்துக்கு சென்றார்.
- ளத்தின் ஆழமான பகுதியில் மகாராஜன் மூழ்கியதில் மனைவி கண் எதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் தலையால்நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மகாராஜன் (வயது28). என்ஜினீயரான இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும், நொச்சிகுளத்தைச் சேர்ந்த சத்தியபிரபாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தலைப்பொங்கலை கொண்டாடுவதற்காக மகாராஜன் தனது மனைவியுடன் மாமனாரின் ஊரான நொச்சிகுளத்துக்கு நேற்று சென்றார். பின்னர் மாலையில் அவர்கள் அங்குள்ள குளத்தில் குளித்தனர். அப்போது குளத்தின் ஆழமான பகுதியில் மகாராஜன் மூழ்கியதில் மனைவி கண் எதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story






