என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை தின கொண்டாட்டம்- பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சிகள் தொடக்கம்
    X

    கலை நிகழ்ச்சி 

    சென்னை தின கொண்டாட்டம்- பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சிகள் தொடக்கம்

    • சென்னை தினம் குறித்த பாடல் வெளியிடப்பட்டது.
    • கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    சென்னை தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

    இதன்படி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளை நேற்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள சென்னை தினம் குறித்த பாடல் அமைச்சர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

    கலாச்சார நிகழ்ச்சிகளையொட்டி மாநகராட்சியின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


    எலியட்ஸ் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள அங்காடிகளுக்கான அரங்குகளை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திறந்து வைத்து பார்வையிட்டார்.


    நிகழ்ச்சியில்,மேயர் ஆர். பிரியா, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×