என் மலர்
உள்ளூர் செய்திகள்

சினிமா படப்பிடிப்பில் சென்னை ஒளிப்பதிவாளர் தவறி விழுந்து பலி
- சுமார் 40 அடி உயரத்தில் இருந்தபோது திடீரென கால் தவறி குமார் கீழே விழுந்தார்.
- பலத்த காயம் அடைந்த குமாரை மற்ற தொழிலாளர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர் கண்டிகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர் பிலிம்சிட்டி உள்ளது. இங்கு ஒளிப்பதிவு கூடம், படப்பிடிப்பு தளம் செயல்பட்டு வருகிறது.
இங்கு வெப்பம் என்ற திரைப்படம் எடுப்பதற்காக பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 47) என்பவர் ஒளிப்பதிவாளராக இருந்தார்.
இந்த நிலையில் சுமார் 40 அடி உயரத்தில் இருந்தபோது திடீரென கால் தவறி குமார் கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த குமாரை மற்ற தொழிலாளர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கவரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமா படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் தவறி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






