என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கனமழையால் முழுவதும் தண்ணீரில் மூழ்கிய சாமல்பட்டி ரெயில்வே தரை பாலம்
  X

  சாமல்பட்டி பகுதியில் பெங்களுரு, திருவாண்ணாமலை செல்லும் பிராதான சாலையில் ரெயில்வே தரைபாலம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளன.

  கனமழையால் முழுவதும் தண்ணீரில் மூழ்கிய சாமல்பட்டி ரெயில்வே தரை பாலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாமல்பட்டி ரெயில் பாலம் மழை நீரால் மூழ்கியது.
  • இதனால்மக்கள் அவதியடைந்தனர்.

  மத்தூர்,

  கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியில் தென்னக இரயில்வே தரைபால் கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூர் -பாண்டிசேரி சாலையில் அமைக்கப்பட்டிள்ளது.இந்த தரைப்பாலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக நீர் வெளியேறும் பாதையை தண்ணீர் அடைத்துக் கொண்டதால் தரைத்தளத்தில் அதிக அளவு நீர் வெளியேராமல் அங்கேயே தேங்கி இருந்தது.

  இதனால் அந்தவழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அருகே உள்ள கெரிகேப்பள்ளி தரைப்பாலம் வழியாக சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலையில் எந்த வாகனமும் செல்ல முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

  இதனால் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். பலநேரங்களில் அவர்களின் வாகனம் தண்ணீரில் சிக்கி கொண்டு வாகனத்தை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் கர்நாடகாவிலிருந்து பாண்டி செல்லக்கூடிய பிரதான வழித்தடம் என்பதால் பெங்களூரில் இருந்து வரக்கூடிய பல தனியார் வாகனங்கள் இந்த ரயில்வே தரைபாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் சிக்கி கொண்டு வாகனங்கள் பழுதடைந்து மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகப்பெரிய அவதிப்படுகின்றனர்

  நேற்று இரவு பெய்த கன காரணமாக தரைப்பாலத்தில் தேங்கிய அதிக அளவு தண்ணீரில் இரண்டு பேருந்துகள் தண்ணீரில் மாட்டிக்கொண்டது . இந்நாள் வரை இதற்கு தீர்வு எட்டவில்லை இப்பகுதியில் அதிக மழை பொழியும் போதெல்லாம் தரைப்பாலம் கட்டியதிலிருந்தே இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . பாலத்தில் இருந்து நீர் வெளிவருவதற்கான வழியை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  Next Story
  ×