என் மலர்
உள்ளூர் செய்திகள்

பங்கனஅள்ளி ஊராட்சியில் மத்திய ஜல்சக்தி மிஷன் குழுவினர் ஆய்வு செய்த காட்சி.
சூளகிரி பகுதிகளில் மத்திய ஜல்சக்தி மிஷன் குழுவினர் ஆய்வு

- சூளகிரி பகுதிகளில் மத்திய ஜல்சக்தி மிஷன் குழுவினர் ஆய்வு செய்தனர்.
- 8 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தரம், மத்திய மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் மத்திய ஜல்சக்தி மிஷன் குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ,சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் அமைந்துள்ளது. இதில் 8 கிராம ஊராட்சிகளான ஆலூர், காமன்தொட்டி, பிர்ஜேபள்ளி, அத்திமுகம், பங்கனஅள்ளி, சென்னப்பள்ளி, ஓசால்லி, மாரண்டபள்ளி ஆகிய 8 கிராம ஊராட்சிகளில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு வாயிலாக தனிநபர் குடியிருப்பு இணைப்புகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்ட செயலாக்ககத்தினை ஆய்வு செய்யும் பொருட்டு மத்திய ஜல் சக்தி மிஷன் அமைச்சரகத்தில் இருந்து சிசியா பால் சேட்டி மற்றும் கன்சான் பாக் அகமத் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
8 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தரம், குளோரிநேசன், பாதுகாப்பான குடிநீர், தங்க தடை இன்றி குடிநீர் வழங்குதல், மற்றும் மத்திய மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், குடிநீர் தரம் பரிசோதனை சுய உதவி குழு உறுப்பினர்கள் மேற்கொள்ளப்பட்டதை கண்காணித்தனர்.
இந்த நிகழ்வில் உதவி திட்ட அலுவலர்கள் அருள்மொழி, தேவ ராஜ்,உதவி செயற்பொறியாளர், மாது,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாப்பிரான்சி, விமல் ரவிக்குமார், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சுய உதவி குழு மேலாளர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.