என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாணவர்களின் அணிவகுப்பை பள்ளி தாளாளர் முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
- காமராஜரின் உருவ படத்திற்கு பள்ளியின் தாளாளர் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர், கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
காமராஜரின் உருவ படத்திற்கு பள்ளியின் தாளாளர் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவர்களின் அணிவகுப்பை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கல்வி வளர்ச்சியை ஊக்குப்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் மாணவர்களின் அணிவகுப்பில் ஊர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி , நாடகம் மற்றும் நடனம் என பல போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Next Story






