என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காவிரியில் வெள்ளப்பெருக்கு  பேரிடர் மீட்பு படையினர்  குமாரபாளையம் வருகை
  X

  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி பேரிடர் மீட்பு படையினருக்கு ஆலோசனை வழங்கிய காட்சி.

  காவிரியில் வெள்ளப்பெருக்கு பேரிடர் மீட்பு படையினர் குமாரபாளையம் வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
  • குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

  குமாரபாளையம்:

  மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.75 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

  இதனிடையே காவிரி ஆற்றின் வெள்ளத்தில் யாரும் சிக்கினால் அவர்களை காப்பாற்ற பேரிடர் மீட்பு படையினர் குமாரபாளையத்துக்கு வந்துள்ளனர். இவர்கள் மீட்பு பணிக்கு தேவை யான பாதுகாப்பு உபகரணங்களுடன் காவிரி கரையில் முகா மிட்டுள்ளனர்.

  மாவட்ட போலீஸ் எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி பேரிடர் மீட்பு படையினரை சந்தித்து, பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

  காவிரி வெள்ளத்தி லிருந்து பொதுமக்களை காப்பாற்ற பேரிடர் மீட்பு படையினர் 34 பேர் வந்துள்ளனர். இவர்கள் பள்ளிபாளையத்திலும் முகாமிட்டுள்ளனர். பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டியதில்லை.

  வெள்ள நீர் பாதிப்பால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடுகளில் எவ்வித திருட்டு சம்பவங்களும் நடக்காமல் இருக்க 24 மணி நேர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

  தொடர்ந்துஅவர் காவிரியில் கரைபுரண்டோ டும் வெள்ளத்தையும், பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கபட்டுள்ள மக்க ளையும் பார்வையிட்டார். நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், நகர தி.மு.க. செயலாளர் செல்வம் ஆகியோரிடம் பொதுமக்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்குதல் உள்ளிட்ட வசதிகள் குறித்து எஸ்.பி. கேட்டறிந்தார்.

  அப்போது திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, நகராட்சி கமிஷனர் (பொ) ராஜேந்திரன், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஓ.க்கள் ஜனார்த்தனன், செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

  Next Story
  ×