search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவநிலை மாற்றத்தால் ஏற்படும்   காய்ச்சலை கட்டுப்படுத்த   சிறப்பு மருத்துவ முகாம்   -கலெக்டர் சாந்தி தகவல்
    X

    தருமபுரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் மாவட்ட கண்காணிப்பு குழுவின் இரண்டாம் காலாண்டு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

    பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம் -கலெக்டர் சாந்தி தகவல்

    • 4 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • குழந்தைகளும் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையும் அறிவுரையும் வழங்கப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட சுகாதார துறை மூலம் தினந்தோறும் 100 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள், நடமாடும் மருத்துவகுழுக்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் மூலம் அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் ஒவ்வொரு மருத்துவ குழுவும் தினசரி-4 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இம்முகாம்கள் ஒரே கிராமத்தில் 3 நபர்களுக்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமங்களிலும், இன்ஃபுளூன்சா, பாதிப்பு அறிகுறி, டெங்கு, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் ஸ்கிரப்டைபஸ், காய்ச்சல் உள்ள பகுதிகளில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளது.

    மேலும், இன்ஃபுளூன்சா காய்ச்சல் அறிகுறியுடன் காணப்பட்டால், மருத்துவர் மூலம் தேவைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு தேவைப்படின் உயர் சிகிச்சை பெற அரசு மருத்துவ மனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும், இவர்களை தனிமைப்படுத்தியும், பள்ளி மாணவர் எனில் காய்ச்சல் குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவகுழு மூலம் காய்ச்சல் பாதிக்கப்பட்ட கிராமத்தில் பள்ளிக்கூடங்கள் மற்றும் ஊட்டசத்து மையங்களில் உள்ள அனைத்து குழந்தைகளும் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையும் அறிவுரையும் வழங்கப்படுகிறது.

    எனவே, இந்த சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் கிராமங்களில் உள்ளூர் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து முன் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்;கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக குடிநீர் மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதிபடுத்தல், குடிநீர் வினியோக குழாய்களில் உடைப்பு இருப்பின் சரிசெய்தல், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களைக் கொண்டு கொசு புழு உற்பத்தியாகும் இடங்களை அழித்தல், முதிர்கொசுவை அழிக்க புகை மருந்து அடித்தல், துப்புறவு பணியாளர்களைக் கொண்டு ஒட்டுமொத்த குப்பை மற்றும் கொசுப்புழு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றுதல் போன்ற பணிகள் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

    மேலும், இப்பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள சுற்றுபுறப் பகுதிகளில் கொசுபுழுக்கள் வளரா இடமாக உறுதி செய்யப்படுகிறது. மேலும், அனைத்து பள்ளி சத்துணவு கூடங்களுக்கும் புகை மருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை சிறப்பான முறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைக்குமாறும் காய்ச்சல் கண்ட நபர்கள் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மருத்துவர் அறிவுரை இன்றி தானாக மருந்து கடைகளில் காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும், கிராம புறங்களில் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×