என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபிலர்மலை அருகே அரசு பஸ் சிறைபிடிப்பு
    X

    கபிலர்மலை பகுதிக்கு பஸ்கள் சரியாக இயக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்த காட்சி. 

    கபிலர்மலை அருகே அரசு பஸ் சிறைபிடிப்பு

    • நேற்று காலை திருச்செங்கோட்டில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
    • அப்போது கபிலர்மலை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென, அரசு பஸ்சை முற்றுகையிட்டு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை 4 ரோடு சந்திப்பில், நேற்று காலை திருச்செங்கோட்டில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது கபிலர்மலை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென, அரசு பஸ்சை முற்றுகையிட்டு சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொது மக்கள் கூறுகையில், பரமத்தி வேலூர் பஸ் நிலையத்தில் இருந்து முன்னர் இயக்கிய டவுன் பஸ் எண்ணிக்கையை பாதிக்கு மேல் குறைத்து விட்டனர். இதனால் பரமத்தி வேலூரில் இருந்து கபிலர் மலை, பாண்டமங்கலம் வழியாக ஜேடர்பாளையம் பகுதிகளுக்கு செல்ல காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்கள் இல்லாமல், வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே கபிலர்மலை வழித்தடத்தில் முன்பு இயக்கிய அனைத்து பஸ்களையும், மீண்டும் சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்றனர்.

    இதையடுத்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரியுடன் பேசி முன்பு போல பஸ்களை இயக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில், சமாதானமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், சுமார் ஒரு மணி நேரம் கபிலர்மலை 4 ரோடு சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×