என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் வணிக, நிதி நிறுவனங்களில் கேமரா அமைக்க வேண்டும்
- பொதுமக்கள் குற்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 என்ற போன் நம்பரை பயன்படுத்த வேண்டும்.
- புகார் செய்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.
பரமத்தி வேலூர்
பரமத்திவேலூர் டி.எஸ்.பி. கலையரசன் கூறியதாவது:-பரமத்தி வேலூர் தாலு காவில் உள்ள அனைத்து வியாபார கடைகள், நிதி நிறுவனங்கள், அனைத்து வீடுகளிலும் திருட்டை தடுக்கும் வகையில் கேமரா வைக்க வேண்டும். கடைகளில் வைத்திருக்கும் கேமராக்கள் சாலையில் வருவோர், போவோர் அடையாளம் தெரியும்படி கேமராவை வைக்கவேண்டும்.
கடைகளில் கல்லாப்பெட்டியை குறிவைத்தே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் செயல்பட்டும் பதிவு ஆகாத நிலையில் உள்ளது. சாலையில் செல்வோரை கண்காணிக்கு ம் வகையில் கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் எவரேனும் நின்று கொண்டிருந்தாலோ சுற்றிக் கொண்டிருந்தாலோ, நோட்டமிட்டாலோ உடனடியாக தொலைபேசி எண் 100-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் பொதுமக்கள் குற்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 என்ற போன் நம்பரை பயன்படுத்த வேண்டும். மேலும் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்டம், லாட்டரி ,கஞ்சா, பான் மசாலா, குட்கா போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை விற்பனையை தடுக்க புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கபப்டும்.புகார் செய்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். பரமத்தி வேலூர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். தற்போது இரவுநேர ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.






