என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    புதிய மோட்டார் வாகன சட்டத்தால்  உயர்த்தப்பட்ட அபராத   தொகையை குறைக்க வேண்டும்
    X

    மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.

    புதிய மோட்டார் வாகன சட்டத்தால் உயர்த்தப்பட்ட அபராத தொகையை குறைக்க வேண்டும்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலை போக்குவரத்து மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.
    • பெட்ரோல்,டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கத்தின் 13-வது மாவட்ட மாநாடு தருமபுரியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம் வரவேற்றார். நிர்வாகிகள் செலக்காரன், செல்வம், சக்திவேல் முன்னிலை வகித்தனர்.

    ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில செயலாளர் மாரியப்பன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், மாநிலக்குழு உறுப்பினர் தமிழ்க்குமரன் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

    இதில் மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், துணைத்தலைவர் சுதர்சனன், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் சக்திவேல், பொதுசெயலாளர் கே.மணி, மாவட்ட துணைச் செயலாளர் நடராஜன், பொருளாளர் முருகன், கட்டுமான செயலாளர் ஏ.சி.மணி, உள்ளாட்சி மாவட்ட தலைவர் மனோகரன், நிர்வாகி முருகேசன், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சாலை போக்குவரத்து மசோதாவை ரத்து செய்ய வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தால் உயர்த்தப்பட்ட அபராத தொகையை குறைக்க வேண்டும்.ரூ 6000 பென்சன் வழங்க வேண்டும். பெட்ரோல்,டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். குடிசைமாற்று வாரியம் மூலம் வீடு வழங்க வேண்டும். எப்சி காலங்களில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ10 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும்.

    கொரோனா கால நிதி உதவி ரூ.7500 யை மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டும். தமிழக ஆட்டோ ஆப் செயலியை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×