search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைத்தேர்தல்  வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
    X

    இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

    • 12-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
    • நாளை மறுநாள் மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம்.

    கோவை :

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள நெம்பர் 10 முத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி, குருநெல்லிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி, சொக்கனூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, நல்லட்டிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளது.

    இந்த பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 9-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது.

    இதில் நெம்பர் 10 முத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு நேற்று வரை 4 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நல்லட்டிப்பாளையம கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், குருநெல்லிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், சொக்கனூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்க ஒருவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

    வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்ததை தொர்ந்து வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடந்தது. வேட்பு மனுக்களை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம்.

    அதன்பின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். வாக்குப்பதிவு 9-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 வரை நடக்கிறது. 12-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    Next Story
    ×