என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நலச்சங்க ஆண்டு விழா
  X

  ஓய்வூதியர் ஒருவருக்கு மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.

  பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நலச்சங்க ஆண்டு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தென்காசி கிளையின் 5-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
  • புதிய நிர்வாகிகள் தேர்வு அதிகாரி கணேசன் முன்னிலையில் நடந்தது.

  தென்காசி:

  தென்காசி மேலகரம் திரிகூடராசப்ப கவிராயர் திருமண மண்டபத்தில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் தென்காசி கிளையின் 5-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. துணைத்தலைவர் அஹமத் அலி தலைமை தாங்கினார். துரைராஜ் இறைவணக்கம் பாடினார்.

  செயலாளர் செல்லப்பா வரவேற்றார். பொருளாளர் வேலாயுதம் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். விழாவில் சங்க மூத்த அதிகாரி கணபதி சுப்பிரமணியனுக்கு 80 - வயது நிறைவடைந்ததையடுத்து அவரை, அஹமத் அலி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் சுப்பிரமணியனின் கடந்த கால நிர்வாக திறமைகளையும், சேவைகளையும் நிர்வாகிகள் செல்லப்பா, வேலாயுதம், கணேசன், கிட்டு ஆகியோர் பாராட்டி பேசினர்.

  தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு அதிகாரி கணேசன் முன்னிலையில் நடந்தது. இதில் தலைவராக அஹமத் அலி, ஆலோசகராக வேலாயுதம், செயலாளராக செல்லப்பா, பொருளாளராக சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.விழாவில் ஏராளமான உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×