என் மலர்
உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறில் தங்கையை தாக்கிய சகோதரர்கள் கைது
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே ஜலகண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன். இவருக்கு 2 மனைவிகள். மூத்த மனைவி தங்கம்மாளுக்கு செந்தில்குமார், தாமரைக்கண்ணன், பூபாலன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
2-வது மனைவி ராஜலட்சுமிக்கு, ஹேமாமாலினி, லாவண்யா என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு விவசாயி சுப்பிரமணியன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, சொத்து பாகப் பிரிவினை செய்து கொள்வதில் முதல் மனைவியின் மகன்கள் மற்றும் 2-வது மனைவியின் மகள்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று தந்தைக்கு சாமி கும்பிடுவதற்காக வீட்டுக்குச் சென்ற ஹேமமாலினியை, சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து தாக்கியதாகவும், தடுக்க வந்த தனது தாயார் ராஜலட்சுமி, தங்கை லாவண்யா ஆகியோரையும் தாக்கியதாக தெரிகிறது.
இதுபற்றி ஹேமமாலினி காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய காரிப்பட்டி போலீசார், செந்தில்குமார்(35). பூபாலன் (30) ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.