என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் வீடுகளில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டி.வி. வெடித்து சிதறியது
    X

    சேதமான டி.வி.யை படத்தில் காணலாம்.

    உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் வீடுகளில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டி.வி. வெடித்து சிதறியது

    • தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டது.
    • பல லட்ச ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் வெடித்து சேதம்

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று இரவு மழை ஏதுமில்லாமல் அமைதியாக காணப்பட்டது. இரவு 10 மணி அளவில் பல்வேறு வீடுகளில் பொதுமக்கள் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.

    டி.வி., ப்ரிட்ஜ் வெடித்தது

    அப்போது 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென டி.வி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பல்புகள் அனைத்தும் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் இல்லை. இதைத் தொடர்ந்து மறுநாள் காலை பார்த்த போது கஞ்சநாயக்கன்பட்டி பள்ளி அருகே உள்ள மின்மாற்றி அருகே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து மின்மாற்றியில் விழுந்ததால் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு வீடுகளில் இருந்த பொருட்கள் சேதம் ஆகியது தெரியவந்தது.

    இதையடுத்து பொதுமக்கள் சின்ன திருப்பதி மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் வந்து காலை 9 மணிக்கு தற்காலிகமாக வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு கொடுத்தனர். பல லட்ச ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் வெடித்து சேதமானது என தெரியவந்துள்ளது. நேற்று இரவு மழை, காற்று என இயற்றை சீற்றம் உள்ளிட்ட எந்த அறிகுறியும் இல்லாமல், உயர் அழுத்த மின்சாரத்தால் திடீரென மின் பொருட்கள் சேதம் அடைந்தது பொதுமக்களை கவலலை அடைய செய்துள்ளது.இதனால் மின்சார வாரியம் சேதமடைந்த பொருட்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×