என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து சிறுவன் தற்கொலை
    X

    வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து சிறுவன் தற்கொலை

    • அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சின்ன கும்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி, கூலி தொழிலாளி. இவரது கணவர் விவேக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர்களுக்கு 17 வயதில் விஸ்வா என்ற மகன் பள்ளி படிப்பை முடித்து வீட்டில் இருந்து வந்தார்.

    மேலும் சிறுவன் குடற்புண் காரணமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 12-ம் தேதி வயிறு வலியால் அவதிபட்ட சிறுவன் மன விரக்தியில் விஷம் சாப்பிட்டு மயக்க மடைந்தார்.

    அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×