என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.
பெரியகுளத்தில் பாஜக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்
- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதாவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- நகரில் மாம்பழ பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கோருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதாவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கள் வெற்றிவேல், வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலு வரவேற்புரை யாற்றினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாதார பிரிவின் தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசினார்.
இதில் பிரதமரின் கனவு திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்துவது எனவும், மாவட்டத்தில் சிறுவர் சிறுமிகளுக்கு போதை பொருட்கள் கிடைப்பதை தடை செய்யக் கோரியும், கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் கனிம வளங்கள் கடத்தலை தடுக்க கோரியும், மல்லாபுரம் -ராஜதானி தார் சாலையை விரிவுபடுத்தி பஸ் போக்குவரத்தை தொடங்க கோரியும், தேனி - உப்பார்பட்டியில் அரசு சிப்காட் தொழில் நிறுவனம் அமைத்திட தேவையான பணிகளை துரிதமாக செயல்படுத்துவது எனவும்,
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றக்கோரியும், நகரில் மாம்பழ பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க கோருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






