search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் யூனியனில்  குளங்களை ஆழப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை
    X

    யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் பணிகளை தொடங்கி வைத்த காட்சி.

    வாசுதேவநல்லூர் யூனியனில் குளங்களை ஆழப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை

    • வாசுதேவநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட நான்கு ஊராட்சி குளங்களை ஆழப்படுத்த ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 81 குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தென்மலை, உள்ளார் தளவாய்புரம், திருமலாபுரம் என்ற அருளாட்சி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊராட்சி குளங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் நோக்கம் தூய்மையான குடிநீர் வழங்குவதாகும். வாசுதேவநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட நான்கு ஊராட்சி குளங்களை ஆழப்படுத்த ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குளங்களை ஆழப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் மார்கோனி, அருள் நாராயணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதுபோன்று வாசுதேவநல்லூர் ஒன்றியம் திருமலாபுரம் என்ற அருளாட்சியில் ரூ. 2.78 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலனி மயானத்தில் நடைபெற்று வரும் தண்ணீர் வசதி, ஆழ்துளை கிணறுடன் கூடிய தொட்டி பணி மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணிகளையும் மற்றும் அப்பகுதியில் நடைபெற்று வரும் வாறுகால் பணிகளையும் வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆய்வு செய்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×