என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    காதலித்த வாலிபர் ஏமாற்றிவிட்டதால்   தீக்குளித்த இளம்பெண் சாவு
    X

    காதலித்த வாலிபர் ஏமாற்றிவிட்டதால் தீக்குளித்த இளம்பெண் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் யாருமில்லாதபோது ஷாலினி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    • ஷாலினியை வாலிபர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து ஏமாற்றிவிட்டதால் மாணவி உயிரை விட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையம் அருகேயுள்ள அக்கமனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் ஷாலினி (வயது 17). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் யாருமில்லாதபோது ஷாலினி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பின்னர் ஷாலினியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்தார்.

    இது குறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் ஷாலினியை காதலித்து வந்தார் என்றும், தற்போது அவர் ஷாலினியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து ஏமாற்றிவிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வாலிபரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×