என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலை ஏற்க மறுத்ததால்   கல்லூரி மாணவியின் கிராமத்தில் நண்பர்களுடன்   புகுந்து ரகளை செய்த கார் டிரைவர்
    X

    காதலை ஏற்க மறுத்ததால் கல்லூரி மாணவியின் கிராமத்தில் நண்பர்களுடன் புகுந்து ரகளை செய்த கார் டிரைவர்

    • நேற்று முன்தினம் நள்ளிரவு விஜய் தனது நண்பர்களுடன் மாணவியின் ஊருக்குள் விஜய் மற்றும் அவருடன் 10-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
    • கிராம மக்களிடையே பேச்சிவார்த்தை நடத்தி இளைஞர்களை மீட்டு மத்தூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள குள்ளம்பட்டி ஊராட்சி, சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த கல்லூரி ஒருவர் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    இந்த மாணவியை காவே ரிப்பட்டிணம் ஒன்றியம் மலையாண்டஹள்ளி புதூர், குட்டி வேடிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்கரை என்பவரது மகன் விஜய் (வயது 22), கார் டிரைவரான இவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் மாணவி கல்லூரி முடித்து பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது விஜய் மாணவியிடம் காதலிக்குமாறு வற்புர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் அந்த கல்லூரி மாணவியை விஜய் தாக்கியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு விஜய் தனது நண்பர்களுடன் மாணவியின் ஊருக்குள் விஜய் மற்றும் அவருடன் 10-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    பின்னர் அங்கு திரண்ட கிராம மக்கள் அந்த இளைஞர்களை பிடித்து கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்பேரில் அங்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமலா அட்வின் நேரில் விசாரணை நடத்தினார்.

    பின்னர் கிராம மக்களிடையே பேச்சிவார்த்தை நடத்தி இளைஞர்களை மீட்டு மத்தூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர்களிடம் இருந்து பத்து செல்போன் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் விஜய் மீது வழக்கு பதிவு போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×