என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
வத்தலக்குண்டு சி.எஸ்.ஐ. பள்ளியில் வகுப்பறை கட்டிடம் திறப்பு
- விமலா செல்லத்துரை நினைவு அறிவியல் ஆய்வகம், 6 வகுப்பறை புதிய கட்டிடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்ஆலை திறக்கப்பட்டது.
- மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு-மதுரை சாலையில் உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் நினைவு சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விமலா செல்லத்துரை நினைவு அறிவியல் ஆய்வகம், 6 வகுப்பறை புதிய கட்டிடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்ஆலை திறக்கப்பட்டது. விழாவிற்கு மதுரை முகவை திருமண்டில பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக ஜே.சி. குழுமத்தைச்சார்ந்த ஜெயசுரேஷ், ஜெய திலகர், ஜெயமனோகர், ஜெயபிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஈடன் கார்டன் உரிமையாளர் கென்னடி கலந்து கொண்டார். பள்ளியின் தாளாளர் எட்வின் செல்லையா வரவேற்புரை ஆற்றினார்.பள்ளியின் தலைமைஆசிரியை ஷீபா நன்றி கூறினார். குருத்துவசெயலர் ரவீந்திரவிக்டர்சிங் நிறைவு ஜெபம் செய்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.