என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி வங்கி அதிகாரி பலி
- வீடு திரும்பும் போது தங்கவேல் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
- இது குறித்து தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி துரைசாமி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (80) நிலவள வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் இவர் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு தருமபுரி எல்ஐசி பகுதியில் நடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
இவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் எடுத்துச் சென்றனர். பின்னர் நேற்று வீடு திரும்பும் போது தங்கவேல் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






