search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு பந்த கால் நடும் விழா
    X

    பந்தகாலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட போது எடுத்தபடம்.

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு பந்த கால் நடும் விழா

    • இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
    • உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

    கடலூ:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது.

    இந்நிலையில் இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவிற்கான பந்த கால் நடும் நிகழ்ச்சி நடை பெற்றன. பந்த காலுக்கு மஞ்சள், குங்குமம் பூசி சிறப்பு பூஜைகள் நடைபெற்று பந்தகால் நடப்பட்டது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக பாடலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி தொடங்கப்பட்டு கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×